கள்ளிச்செடி நான்
சொல்வதைக் கேளுங்கள்
கவிதைகளை தொடாதீர்கள்
அதனை ஆராய முற்படாதீர்கள்
தூரமிருந்து பாருங்கள்
இரசியுங்கள்
காயஊற்றில் வளர்ந்த
கள்ளிமுட்கள் அவை
அதன் ஆழ அடர்த்தியை காண
அருகில் நெருங்கினால்
சில நேரங்களில்
உங்களின் இதயத்தையும்
பதம் பார்க்க நேரிடலாம்.
#நா. ஹரிஹரன#
22.07.2020 ;1.15pm
No comments:
Post a Comment