பொய் என்ற வாழ்வை திருமணம் செய்து, சலித்துப்போன ஓர் வயோதிகர் உண்மையை உணர்ந்து,
மரணத்தை ஆசையாய் மறுமணம் புரிய எத்தனித்தபோது, அவரின் எண்ணத்துளிகளில் சில என் எழுதுகோலில் விழுகையில் பிரசவித்த கவிதை இது... ( *முற்றுப்புள்ளி* ) .
என்னை தழுவப் போகும்
கடைசி காற்று எது.?
என்னை நனைக்கப் போகும்
கடைசி இரவு எது.?
என்னை உலர்த்தப் போகும்
கடைசி விடியல் எது?
என்னை பார்த்துச்சிரிக்கும்
கடைசி பூக்கள் நீங்கள்தானா.?
என் மரணத்தை வேண்டியா -காலம்
எனக்கு முன்னர் இறந்து கொண்டிருக்கின்றன.
ஓ,,, இதுதான் என் இறுதிக்காலங்களை
ஓலமிடும் மரணக் காலங்களா..?
மரணம் அது ஒன்றும்
அவ்வளவு கொடிதல்ல,
*இறைவனால் கேட்காமல் தரப்படும்
ஒரே வரம் இதுதான்.*
இவ்வரத்தை கேட்காமல் போனவன் பல,
ஆனால்
வாங்காமல் போனவன் இதுவரை
கணக்கில் இல்லை.
மரணம் அது ஒன்றும்
அவ்வளவு கொடிதல்ல
இயற்கை எனக்காய் இயற்றும்
இறுதி கவிதையல்லவா இது.
இயற்கை காதலன் நான்
ஆம்
மரண வாயிலில்
இயற்கை இயற்றும்
இயற்கைக்கு காதலன்.
என் மரணம் உறுதி
எல்லோர்க்கும் இதுவல்லவா இறுதி.
ஜனனம் தாயின் மடியில்
மரணம் மண்ணின் மடியில் .
பார்,,, பார்,, மனிதா
நாம் இன்னும் வளரவேயில்லை
தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
முதலில் தாயின் மடியில்
முடிவில் மண்ணின் மடியில்
பார்,,, பார்,,, மனிதா
நாம் இன்னும் வளரவேயில்லை..
*************************
(இயற்கையின் விதிகளுல் என்றும் மாறாதது மரணம்.மனிதன் போர் புரிவது மனிதனிடம் அல்ல மரணத்திடம் ,,ஆம்
நிஜத்தை எதிர்த்து நிழல்போர்.
*#நா. ஹரிஹரன் #*
No comments:
Post a Comment